Wednesday, March 6, 2013

புதிய தொழில்நுட்பத்துடன் சாம்சுங் கேலக்சி எஸ்4


ஆப்பிள் நிறுவத்தினரோடு போட்டி போட்டுக்கொண்டிருக்கும் சாம்சுங் நிறுவனம் ஜ-போனை மிஞ்சும் வகையில் தன்னுடைய அடுத்த தயாரிப்பை வரும் 14ஆம் திகதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது
 கேலக்சி எஸ்4 என்ற இந்தப் புதிய செல்போன்,
பார்ப்பவரின் கண் அசைவைக் கொண்டு பக்கங்களை நகர்த்தும் தன்மை உடையதாக இருக்கும் என்று சாம்சங் நிறுவன ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  5 அங்குல திரை கொண்ட இந்த செல்போனில், 13 மெகா பிக்ஸல் கேமராவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் ஐரோப்பாவில் ஐ-ஸ்க்ரோல் என்ற வணிக முத்திரைக்காகப் பதிவு செய்து பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் சாம்சங் ஐ-ஸ்க்ரோல் என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மொபைல் போன் மற்றும் லாப்டப் கம்ப்யூட்டர் போன்றவற்றை கண்களின் அசைவைக் கொண்டு இயக்கக்கூடிய கணினி பயன்பாட்டு மென்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சாம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, மிகுந்த எதிர்பார்ப்புக்களும் ஊகங்களும் இந்த புதிய வெளியீடு குறித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment